Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கறிவேப்பிலை மிளகுபூண்டு குழம்பு

தேவையானவை

பூண்டு - 100 கிராம், மிளகு, தனியா - தலா

ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரைடீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 100 மில்லி.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ளவும். பூண்டினை தோல் உரித்து எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வதக்கிய பூண்டு சேர்த்து, அரைத்து வைத்ததையும் சேர்க்கவும். பூண்டு வெந்ததும், கடுகு - உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டி இறக்கவும்.