தேவையானவை:
கெட்டித் தயிர் - 2 டம்ளர்
சர்க்கரை - 2 டம்ளர்
தேங்காய் துருவல் - 1 கப்
திராட்சை - சிறிது
மைதா - 1 டம்ளர்
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கெட்டித் தயிரை சுத்தமான துணியில் கொட்டிப் பிழிந்து தண்ணீர் முழுவதையும் வடித்து விடவும். எஞ்சி இருக்கும் தயிர் விழுதில் சர்க்கரை, தேங்காய் துருவல், கிஸ்மிஸ் பழம், 1 சிட்டிகை உப்பு எல்லாம் போட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். மைதாமாவில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து அப்பளங்கள் (சிறுசிறு) இட்டுக் கொள்ளவும். ஒவ்வொரு அப்பளத்திலும் தயிர்பூரணத்தை இரண்டிரண்டு ஸ்பூன் வைத்து மூடி ஓரங்களை சேர்த்து அழுத்தி மூடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சோமாஸ்களை பொரித்தெடுக்கவும். வித்தியாசமான சோமாஸ்கள் எல்லோரையும் கவரும்.



