தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 1 கப் (துருவியது)
புளித்த மோர் - 1 கப்
தேங்காய்ப்பால் - ½ கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 சிறிய துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - சில
உலர் மிளகாய் - 1
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
வெள்ளரிக்காயை துருவி வைக்கவும்.பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வெள்ளரிக்காயில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது மஞ்சள் தூள், உப்புசேர்க்கவும்.
புளித்த மோர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உலர் மிளகாய், கருவேப்பிலை தாளித்து மேலே சேர்க்கவும்.
குறிப்பு - சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதால் தாளித்தால் மட்டும் போதும்.
மருத்துவ பயன்கள்:
வெள்ளரிக்காய் உடல் சூட்டை குறைக்கும்.
மோர் மற்றும் சீரகம் வயிற்றுக்கு நல்லது.
எடை குறைக்க உதவும் குறைந்த கலோரி உணவு.
தேங்காய்ப்பால் + மோர் சேர்ந்து நீர்ச்சத்து தரும்.
