தேவையானவை
பச்சை கொத்துமல்லி இலை - 2 கட்டு
உளுந்தம் பருப்பு - 4 தேக்கரண்டி
வரமிளகாய் - 8
பெருங்காயம் - 1 சிறு துண்டு
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
கொத்துமல்லி இலைகளை சுத்தம் செய்து அலசி பின் துணியில் பரப்பி காற்றோட்டமாக வைக்கவும். வாணலியை வைத்து காய்ந்ததும் உளுந்தம் பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். பின்னர், சிறிது எண்ணெய்விட்டு வரமிளகாய், பெருங்காயம் இவற்றை வறுத்துக் கொள்ளவும். கொத்துமல்லி இலையை வாணலியில் போட்டு மிதமான தீயில் வதக்கவும். பின்னர், மிக்ஸியில் புளி, கொத்துமல்லி இலை மற்ற பொருட்களை சேர்த்து அரைக்கவும். இதை நெய்விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


