Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

கொத்தமல்லி பிரியாணி

தேவையான பொருட்கள்:

*பாஸ்மதி அரிசி - 1 கப்

*தண்ணீர் - 1.5 கப்

*உப்பு -தேவையான அளவு

அரைப்பதற்கு:

*கொத்தமல்லி இலைகள் - ஒரு கட்டு

தாளிக்க:

*எண்ணெய் + நெய் - 2 ஸ்பூன்

*இலவங்கப்பட்டை - 1 இன்ச்

*கிராம்பு - 3

*ஏலக்காய் - 1

*கல்பாசி - சிறிதளவு

*சோம்பு - 1/2 ஸ்பூன்

*பிரியாணி இலை - 1

*பெரிய வெங்காயம் - 1

*சின்ன வெங்காயம் 10

*பச்சை மிளகாய் - 2

*இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்

*மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

*கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்

*மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

*தயிர் - 1/2 கப்

*பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி

*முந்திரிப் பருப்பு - சிறிது

செய்முறை:

கொத்தமல்லியை நன்றாக கழுவி அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியைக் கழுவி, குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். கொத்தமல்லித் தழைகளுடன் சிறிதளவு நீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்துத் தனியே எடுத்து வைக்கவும்.

வெங்காயங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும், பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். சின்ன வெங்காயங்களைச் கொரகொரப்பாக அரைத்து தனியே வைக்கவும்.

ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துச் சூடுபடுத்தவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு மற்றும் கல்பாசி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, நன்றாக வதக்கவும். இப்போது மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.

பின்னர் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி இலை விழுது மற்றும் பட்டாணியைச் சேர்த்து, நன்றாக வதக்கவும். இறுதியாக, தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பச்சை வாசனை போனதும் பாஸ்மதி அரிசி மற்றும் நீரைச் சேர்த்து, கொதிக்க விடவும். குக்கரை மூடி, மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் வெளியேறும் வரை காத்திருக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரை திறந்து ஒரு கரண்டியால் கிளறினால் சுவையான கொத்தமல்லி பிரியாணி ரெடி.