Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி - 1 டம்ளர்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்,

பெரிய வெங்காயம் - 2

முந்திரிப் பருப்பு - 20

கிராம்பு - 6

லவங்கப்பட்டை - 6

ஏலக்காய் - 6

வெள்ளைப் பூண்டு உரித்தது - 6 பல்லு

பெரிய தேங்காய் - 1/2 மூடி

பச்சை மிளகாய் - 2

பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு - தேவைகேற்ப

உப்பு தேவை யான அளவு

செய்முறை :

முதலில் காய் கறிகளைச் சிறிய துண்டு களாக நறுக்கி திட்ட மான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள் ளவும். பின்னர் தேங் காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனை த்தையும் தயார் நிலை யில் வைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்தி ரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய விடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகிய வற்றை போட்டு பொன்னி றமாக வதக்கவும். அம்மியில் வைத்து பொடித் தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத் துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதான மாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக் கவும். இதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத் தமாக இருக்கும். தற்போது ருசியான தேங்காய்ப் பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.