தேவையானவை:
பச்சரிசி - 2 கப்
உளுத்தம் பருப்பு - ½ கப்
முற்றிய தேங்காய் - 1
வெள்ளை எள் - 100 கிராம்
பெருங்காயம் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
எள், சீரகம் - 2 ஸ்பூன்.
செய்முறை:
பச்சரிசி, உளுத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி பால் பிழிந்து வடிகட்டவும். இரண்டு மாவை கலந்து அதில் தேங்காய்ப்பால், உப்பு, பெருங்காயம், வெண்ணெய், எள், சீரகம் எல்லாம் போட்டு தண்ணீர் கலந்து கெட்டியாக பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தேன்குழல் அச்சில் மாவை போட்டு பிழிந்து பொரித்தெடுக்கவும்.



