தேவையான பொருட்கள்:
* 1 நறுக்கிய தக்காளி
* 2 பச்சை மிளகாய்
* சிறிது கறிவேப்பிலை
* 1 கப் புளிக்கரைசல்
* ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
* 1 ஸ்பூன் உப்பு
* 2 கப் தண்ணீர்
* 1 கப் தேங்காய்ப்பால்
* 2 ஸ்பூன் கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது)
மசாலா அரைக்க:
* ½ ஸ்பூன் மிளகு
* ஸ்பூன் சீரகம்
* 8 பூண்டு பல்
தாளிக்க:
* 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
* 1 ஸ்பூன் கடுகு
* 1/2 ஸ்பூன் சீரகம்
* 2 சிட்டிகை பெருங்காயம்
* 2 வர மிளகாய்
* 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
* முதலில், ஒரு பாத்திரத்தில் 1 தக்காளி, 4 மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்து நன்றாகப் பிசையவும்.
* அதில் 1 கப் புளிக்கரைசல், ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* தக்காளி மற்றும் மிளகாய் நன்கு மசியும் வகையில் பிசைந்து கலக்கவும்.
* இந்தக் கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றவும். 2 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
* ஒரு மிக்சி ஜாரில் ½ஸ்பூன் மிளகு, ஸ்பூன் சீரகம் மற்றும் 8 பல் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பான விழுதாக அரைக்கவும்.
* தயார் செய்த மசாலா கலவையை ரசத்தில் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
* பின்னர் 1 கப் திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
* தீயைக் குறைவான அளவில் வைத்து, ரசம் கொதிக்கத் தொடங்கும் வரை சூடாக்கவும்.
* தேங்காய்ப்பால் திரிந்துபோக வாய்ப்புள்ளதால், அதிகமாக கொதிக்கவிடக்கூடாது.
* ரசத்தைத் தாளிக்க ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் 1 ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம், 2 காய்ந்த மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* கடுகு நன்கு பொரிந்ததும், அதை ரசத்தின் மீது ஊற்றவும். மேலும், 2 மேசைக்கரண்டி கொத்தமல்லித் தழையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அவ்வளவுதான் மணமணக்கும் தேங்காய்ப்பால் ரசம் ரெடி

