தேவையானவை:
தேங்காய் துருவல் - 2 கப்,
சர்க்கரை - 1½ கப்,
ஏலக்காய் தூள் ½ டீஸ்பூன்,
திராட்சை, முந்திரி துண்டுகள் தலா - 2 டீஸ்பூன்,
கோவா 1½ கப்,
நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
தேங்காய் துருவல், கோவா, சர்க்கரை ஆகியவற்றை அடி கனமான கடாயில் போட்டு அடுப்பில் வைத்து, மிதமான தீயில் கிளறவும். எல்லாம் கலந்து இறுகி வரும் சமயம் நெய் விட்டு கிளறவும். உருட்டும் பதம் வந்ததும் ஏலக்காய் தூள், திராட்சை, முந்திரி துண்டுகள் சேர்த்து கலந்து நெய் தடவிய பாத்திரத்துக்கு மாற்றி, மிதமான சூடு இருக்கும் போதே கையில் நெய் தடவிக் கொண்டு கலவையை சிறு சிறு
உருண்டைகளாகப் பிடிக்கவும்.


