தேவையானவை:
மைதா - 2 கப்,
தேங்காய் துருவல் - 1½ கப்,
சர்க்கரை - 1½ கப்,
பால் - 1 கப்,
முட்டை - 3,
பட்டர் - 1 கப்,
உப்பு - ஒரு சிட்டிகை,
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, பேக்கிங் பவுடர் அனைத்தையும் சலித்து ஒன்றாகக் கலந்து வைக்கவும். அதனுடன் உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். முட்டையை அடித்து அதில் பால், வெனிலா எசன்ஸ் கலந்து கொள்ளவும். மேலும் இதை மாவுக் கலவையில் சேர்த்து தேங்காய் துருவலும் சேர்க்கவும். பட்டர் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி 160 டிகிரி சூடு செய்த ஓவனில் 40 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.


