Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

சௌ சௌ பொரியல்

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

சின்ன வெங்காயம்/பெரிய வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)

சௌ சௌ - 1/2 கிலோ (தோல் நீக்கி பொடியாக நறுக்கியது)

தண்ணீர் - 1/4 ப்

உப்பு - சுவைக்கேற்ப

கொத்தமல்லி - சிறிது

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவேண்டும்.பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள சௌ சௌ காயை சேர்த்து, 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, 5-8 நிமிடம் காயை வேக வைக்க வேண்டும்.காய் வேவதற்குள், மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.காய் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்கு 3 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சௌ சௌ பொரியல் தயார்.