தேவையானவை:
பாசுமதி அரிசி - 1 கப்
சுண்டல் - 2 கப்
குடைமிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
பிரியாணி இலை - 1
தக்காளி - 3
பட்டை - சிறிது
கிராம்பு- 1
வெங்காயம் - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
வதக்கி அரைக்க: சீரகம் - 1 ஸ்பூன், பூண்டு பல் - 6, காய்ந்த மிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 6.
செய்முறை: சுண்டலை இரவு ஊறவைத்து குக்கரில் உப்பு போட்டு வேக வைக்கவும். வெறும் வாணலியில் அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைக்கவும். குக்கரில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, நறுக்கிய குடைமிளகாய், அரைத்த மசாலா, உப்பு சேர்த்து வதக்கி தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடவும். அதில் வேகவைத்த சுண்டல், நெய்யில் வறுத்த அரிசி, சாட் மசாலா சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து சுடச்சுட பரிமாறவும்.
- எம்.வசந்தா, சென்னை.
