Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி

தேவையான பொருட்கள்:

* அரை கிலோ எலும்பில்லா சிக்கன்

* அரை கப் மோர்

* தேவையான அளவு உப்பு

* 1 ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது

* ஸ்பூன் மிளகுத்தூள்

* 1 முட்டை, நன்கு அடித்தது

* 3 ஸ்பூன் சோளமாவு

* 1 ஸ்பூன் பூண்டு, பொடியாக நறுக்கியது

* 1 ஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கியது

* 2 பச்சை மிளகாய், கீறியது

* 2 வர மிளகாய்

* 1 கொத்து கறிவேப்பிலை

* 1 ஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய்த்தூள்

* ஸ்பூன் மஞ்சள்தூள்

* ஸ்பூன் கரம் மசாலாத்தூள்

* 2 ஸ்பூன் கெட்டியான தயிர்

* 1 ஸ்பூன் சோயா சாஸ்

* 2 ஸ்பூன் நறுக்கிய புதினா இலைகள்

* 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

* பொரிப்பதற்கு எண்ணெய்

செய்முறை:

*எலும்பில்லாத சிக்கனை மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டவும்.

*ஒரு கிண்ணத்தில், மோர் மற்றும் உப்பைக் கலக்கவும். சுத்தம் செய்த சிக்கனை உப்பு கலந்த மோரில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

*நாளை செய்வதாக இருந்தால் இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் ஊறவைக்கவும். இப்படி செய்வதன் மூலம் சுவை அதிகரிக்கும்.

*பின்னர் மோர் முழுவதையும் நன்றாக பிழிந்துவிட்டு, சிக்கனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

*அதில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், அடித்து வைத்த முட்டை மற்றும் சோள மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

*அடி கனமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அதிக தீயில் சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் தீயை மிதமான நிலைக்குக் குறைத்து, சிக்கன் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டுப் பொரிக்கவும்.

*சிக்கன் எல்லாப் பக்கங்களும் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும். பின்னர் அவற்றை எடுத்து தனியே வைக்கவும்.

*மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்; அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 30 வினாடிகள் வதக்கவும்.

*கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, மேலும் 30 வினாடிகள் வதக்கவும்.

*தீயைக் குறைத்து, வர மிளகாய், காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். மிதமான தீயில் 30 வினாடிகள் வதக்கவும்.

*பின்னர் தயிரைச் சேர்த்து மசாலாக்களுடன் நன்றாகக் கலக்கவும். இதை 2 நிமிடம் கொதிக்க விடவும்.

*பின்னர் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

*தீயை அதிகப்படுத்தி, வறுத்த சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். 3-4 நிமிடங்கள் மசாலாவில் வதக்கவும்.

*இறுதியாகநறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கவும்.

*அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் அருமையான சிக்கன் மெஜஸ்டிக் ரெடி.