Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை

தேவையான பொருட்கள்:

இறால் - 500 கிராம்

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - சிறிது

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வரமிளகாய் - 2

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் எடுத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்சர் ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்த மிளகு சீரக பொடி, கரம் மசாலா, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி 7-8 நிமிடம் இறாலை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை தயார்.