Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

எலும்பு - 250 கி

து.பருப்பு 50 கி

வெங்காயம் 1

முருங்கைக்காய் 1

மிளகாய் தூள் 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி

புளித் தண்ணீர் 2 தேக்கரண்டி

தனியா தூள் 4 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி

தக்காளி 2

உப்பு - தேவையான அளவு

அரைத்துக் கொள்ள:

தேங்காய் 2 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

தாளிக்க:

பிரியாணி இலை 1

சோம்பு 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை 1 கொத்து

நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி

பட்டை - சிறிய துண்டு

கல் பாசி சிறிது

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.எலும்பை நன்றாகக் கழுவி குக்கரில் போட்டு து.பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொரிய விடவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின், தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்கவும். பிறகு, குக்கரில் உள்ள பொருட்களைச் சேர்க்கவும். பின் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து, முருங்கைக்காய், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொதிக்க வைக்கவும்.புளித் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.சுவையான, மணம் மிகுந்த செட்டிநாடு நெஞ்செலும்பு முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட தயார்.