தேவையான பொருட்கள்:
காலிபிளவர் 1
பெரிய வெங்காயம் 1
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
செய்முறை:
காலிஃப்ளவரை வெட்டி சுத்தம் செய்து உப்பு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய்விட்டு முதலில் வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும். பிறகு அதே வாணலியில் மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுத்தெடுக்கவும்.மேலும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பொரிந்ததும் தட்டி வைத்த பூண்டுகளைப்போட்டு பொரித்து வைத்துள்ள வெங்காயம், காலிபிளவர் சேர்த்து மிளகுத்தூள், காரப்பொடி, கறிவேப்பிலை போட்டு கலந்து விட ருசியான காலிபிளவர் வறுவல் தயார்.


