தேவையானவை:
காலிஃப்ளவர் - ஒரு சிறிய பூ,
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,
முந்திரிப் பருப்பு - 5,
மிளகாய்த்தூள்,
தனியாத்தூள்,
சீரகத்தூள்,
கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
காலிஃப்ளவரை வெந்நீரில் 2 நிமிடம் போட்டு தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் முந்திரிப் பருப்பை பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு, வெந்த காலிஃப்ளவரை சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.


