Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலிஃப்ளவர் பிரியாணி

தேவையான பொருட்கள்:

நெய்-3 ஸ்பூன்

எண்ணெய்-3 ஸ்பூன்

பிரியாணி இலை-1

பட்டை-3

ஸ்டார் பூ -1/2

ஏலக்காய்-3

சோம்பு -1/2 ஸ்பூன்

பெரிய வெங்காயம்-3(நறுக்கியது)

பச்சை மிளகாய்-5 (கீறியது)

தக்காளி -2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்

புதினா-1 கைப்பிடி

மல்லி இலை- 1/2 கைப்பிடி

காலிஃப்ளவர் -1

தயிர்-3 ஸ்பூன்

மிளகாய் பொடி-1 ஸ்பூன்

கரம்மசாலா -1/2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

தேங்காய் பால்- 21/2 கப்

பாசுமதி அரிசி-2 கப்

செய்முறை:

முதலில் காலிஃப்ளவரை 5 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு மூடி வைத்து பிறகு எடுத்து வைத்து கொள்ளவும். பாசுமதி அரிசியை கழுவி தண்ணீர் விட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்.குக்கரை அடுப்பில் வைத்து தீயை வைத்து குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, ஸ்டார் பூ, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பின்னர் பச்சை மிளகாயை கீறி சேர்க்கவும்., பிறகு நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கி புதினா, மல்லி இலை சேர்த்து வதக்கவும். பின்னர் காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு வதக்கி தயிர் விட்டு கிளறி விடவும்.அதன் பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு நன்கு கிளறி விடவும். தேங்காய் பாலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மொத்தம் 31/2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி உப்பு, காரம் சரிபார்த்துக் கொள்ளவும். பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி குக்கரை மூடி தீயை மீடியமாக வைத்து 3 விசிலுக்கு வைக்கவும். பின்னர் விசில் சத்தம் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்தால் குழையாமல் மணத்துடன் கூடிய சுவையான காலிஃப்ளவர் பிரியாணி தயார்.