தேவையானவை:
முந்திரி - 250 கிராம்,
சர்க்கரை - 250 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்.
செய்முறை:
ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை நன்றாகப் பொன்னிறமாக வறுத்து ஆறிய பின், மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும். சர்க்கரையை சிறிது நீர் விட்டுப் பாகுக் காய்ச்சவும். கம்பி பதம் வந்ததும் முந்திரிப் பொடி, ஏலக்காய் தூள் போட்டுக் கிளறவும். சிறிது நெய் சேர்க்கவும். 6 நிமிடத்தில் பதம் வந்து விடும். நெய் தடவியத் தட்டில் கலவையைக் கொட்டி பரப்பி ஆறியதும் தேவையான வடிவத்தில் துண்டுகள் போடவும்.



