தேவையானவை:
புழுங்கல் அரிசி - ¼ கிலோ
உருளைக்கிழங்கு - 1, சோம்பு
வரமிளகாய், உப்பு - தேவையான அளவு
பச்சைப் பட்டாணி, கடலைப்பருப்பு - 50 கிராம்
இஞ்சி, பூண்டு, வெங்காயம், முட்டைகோஸ் - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, பருப்பு வகைகளை 4 மணி நேரம் ஊறவைத்து, அதில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு, சோம்பு, வரமிளகாய், உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். அதில் கோஸ், வெங்காயத்தை பொடியாக அரிந்து மாவில் சேர்த்து, மெல்லிய அடையாக தட்டவும். உருளைக்கிழங்கு அடை தயார்.


