தேவையானவை:
*மைதா - 1 கப்
*நெய் - 2 டீஸ்பூன்
*ஓமம் - ½ ஸ்பூன்
*உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
*மைதாவில் உப்பு, ஓமம் சேர்த்துக் கலக்கவும். நெய்யை சூடாக்கி மாவில் விட்டுக் கலக்கவும்.
*தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து, வேண்டிய டிசைனில் கட் செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான நிம்கி ரெடி.
* இது 15 நாள் ஆனாலும் கெடாத ஸ்நாக்ஸ்.

