தேவையானவை:
தினை மாவு - 2 கப்
அரிசி மாவு - கால் கப்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 1
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
மோர் - அரை கப்.
செய்முறை:
மோரில் சிறிது தண்ணீர் கலந்து அதனுடன் தினைமாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, தேங்காய்த் துருவல், உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவை 10 நிமிடம் ஊறிய பிறகு அடையாக வார்க்கவும். இதனுடன், கொத்துமல்லி சட்னி, சாம்பார், தக்காளி சட்னி சேர்த்து சாப்பிடலாம்.


