Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

பரங்கிக்காய் சாதம்

தேவையானவை:

உதிரியாக வடித்த பச்சரிசி சாதம் - ¼ கிலோ,

பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் - 1 கப்,

உப்பு - தேவையான அளவு,

மஞ்சள் பொடி,

சர்க்கரை - சிட்டிகை.

மேல் பொடிக்கு வறுத்துப் பொடிக்க:

வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,

சிவப்பு மிளகாய் - 2,

தனியா, கடலை பருப்பு - தலா 1 டீஸ்பூன்,

மிளகு - ¼ டீஸ்பூன், துருவிய உலர்

கொப்பரை - 2 டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:

சமையல் எண்ணெய் - 50 கிராம், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ½ டீஸ்பூன், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் - தலா 1, கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயப் பொடி - சிறிது, முந்திரி - 10.

செய்முறை:

மேல் பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து (எண்ணெய் விடாமல்) பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்கும் பொருட்கள் தாளித்து உடன் துருவிய பரங்கிக்காய், உப்பு, சர்க்கரை, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கி உதிரியாக வடித்த சாதத்தில் சேர்க்கவும். பொடித்த பொடியையும் நன்கு தூவி கலந்து விடவும். காய், பொடி, சாதம் நன்கு புரட்டி சேர்ந்து கலந்து ராய்த்தா, சிப்ஸ், பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும். புளி, எலுமிச்சை சாதத்தைவிட இது சற்றே வித்தியாசமான சுவையாய் இருக்கும்.