Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கேரட் மைசூர்ப்பா

தேவையான பொருட்கள்

1 கப் கடலைமாவு

1/2 கப் கேரட் விழுது

3 கப் சர்க்கரை

1/4 கப் பால் பவுடர்

2 கப் நெய்

1/2 கப் வனஸ்பதி

1/2 கப் ஆயில்

செய்முறை:

கடலைமாவு மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்.கேரட்டை நன்றாக துருவி நைசாக அரைத்து எடுக்கவும்.சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் கேரட் விழுது சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.ஒரு கம்பி பதம் வந்ததும் ஜலித்து வைத்துள்ள கடலைமாவு மற்றும் பால் பவுடர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கிளறவும்.எண்ணெய் நெய் மற்றும் வனஸ்பதி ஆகியவற்றை தனியாக சூடாக்கவும்.மாவு வெந்ததும் சூடான நெய் எண்ணெய் வனஸ்பதி கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்.ட்ரேயில் நெய் தடவி ரெடியாக வைக்கவும்.சிறிது நேரத்தில் அடியில் இருந்து நுரைத்து பொங்கி வரும் போது ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டவும்.பின் நன்கு சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்.