தேவையான பொருட்கள்:
*பச்சை குடைமிளகாய் - 1
*எண்ணெய் அல்லது வெண்ணெய் - 2 ஸ்பூன்
*சீரகம் - 1/2 ஸ்பூன்
*மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
*மல்லித்தூள் - 1 ஸ்பூன்
*கரம் மசாலா தூள் -1 தேக்கரண்டி
*சர்க்கரை - 1/2 ஸ்பூன்
*உப்பு - தேவையான அளவு
*தண்ணீர் - தேவையான அளவு
*எலுமிச்சைச் சாறு - 1 ஸ்பூன்
*கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
வறுத்து அரைக்க:
*எண்ணெய் -1 ஸ்பூன்
*வேர்க்கடலை - 3 ஸ்பூன்
*இஞ்சி - 1 இன்ச்
*பூண்டு - 6 பல்
*பெரிய வெங்காயம் -1
*தக்காளி - 2
செய்முறை:
*குடைமிளகாயை நன்றாக கழுவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
*ஒரு கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெயை சேர்த்து சூடாக்கவும். வேர்க்கடலையின் தோல் வெடிக்கும் வரை வறுக்கவும்.
*பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
*பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து கூழ் பதம் வரும் வரை வதக்கவும். இதை ஆறவைத்து, மென்மையான விழுதாக அரைக்கவும்.
*ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்.
*பின்னர் நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலாவை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துகிளறவும்.
*அதன்பின் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
*மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
*வாசனை வரும் வரை குருமாவை நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து இறுதியாக சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து கிளறவும்.
*ஒரு கைப்பிடி கொத்தமல்லி சேர்த்து அலங்கரித்து சூடான சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறவும்.


