Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டர் பனீர்

தேவையானவை

பனீர்- 200 கிராம்

வெங்காய விழுது- 100 கிராம்

தக்காளி விழுது - 250 கிராம்

நறுக்கிய பச்சைமிளகாய் - 3

மிளகாய் தூள்- அரை தேக்கரண்டி

சீரக தூள்- அரை தேக்கரண்டி

மல்லி தூள்- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி

உப்பு- தேவைக்கேற்ப

தேங்காய்ப் பால்- 1 டம்ளர்

கரம் மசாலா தூள்- அரை தேக்கரண்டி.

தாளிக்க

வெண்ணெய்- 50 கிராம்

பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா 1 துண்டு

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி.

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்க வேண்டும். பின்னர், வெங்காய விழுது, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு கிளறி, தக்காளி விழுது, மசாலா தூள்கள் சேர்த்து வதக்கவும். பின்னர், தண்ணீர் சிறிது சேர்த்து கொதிக்கவிடவும். இதில் பனீர் துண்டுகள், உப்பு சேர்த்து கிளறவும். இக்கலவை கொதிக்கத் தொடங்கும்போது, தீயைக் குறைத்து தேங்காய்ப்பால் ஊற்றி கிளறி விட்டு, கடைசியில் வெண்ணெய் சேர்த்து இறக்கி விட்டால் பட்டர் பனீர் தயார்.