பிரட் அல்வா
பிரட் ஸ்லைஸ்- 6
சர்க்கரை -1/2 கப்
காய்ச்சிய பால் - 1/2 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை -10
ஆரஞ்சு புட் கலர் – சிட்டிகை
செய்முறை:
ஒரு கடாயில் சர்க்கரை போட்டு கால் கப் நீரூற்றி தீயில் வைத்து கிளறி முதல் பாகு தயார் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிய பிரட் துண்டுகளை அதில் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
பிரெட் துண்டுகள் சர்க்கரை பாகில் ஊறிய பிறகு அவற்றை நன்றாக மசித்துக்கொள்ளவும். இதில் பால் மற்றும் கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து பால் சுண்டும்வரை அடுப்பில் வைத்துக் கிளறவும். வைக்கவும். கலவை கெட்டியானதும் சிறிது சிறிதாக நெய் சேர்க்கலாம். இறக்கும் முன் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்துக் கிளறி கலவை கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை அணைத்து எடுத்து கிண்ணத்தில் வைத்து பரிமாறவும். ஏலக்காய் சேர்ப்பது அவரவர் சாய்ஸ். சுவையான ப்ரெட் அல்வா ரெடி.