Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருப்பு உளுந்து பிரியாணி

தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரிசி - 1 கப்

உடைத்த கருப்பு உளுந்து - ½ கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி-பூண்டு விழுது - 1½ தேக்கரண்டி

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி - ஒரு கொத்து

தயிர் - ¼ கப்

பிரியாணி இலை - 1

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

சோம்பு - ½ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்

கரம் மசாலா - ½ டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை

உடைத்த கருப்பு உளுந்தை நன்றாகக் கழுவி 6-8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் வேகவைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். வேகவைத்த கருப்பு உளுந்தை சேர்த்து 23 நிமிடங்கள் கிளறவும். புதினா, கொத்தமல்லி, தயிர் சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து மெதுவாகக் கிளறி, தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வேகவைக்கவும். அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் தம் வைத்து இறக்கவும். சுவையான கருப்பு உளுந்து பிரியாணி தயார்.

கருப்பு உளுந்தின் பயன்கள்

தசைகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் உதவும்.

செரிமானத்தை சீராக வைத்திருக்கவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவலாம்.

கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன.

உடலின் இயல்பான ரத்த அணு உருவாக்கத்திற்கு தேவையான ஊட்டச் சத்துகளில் ஒன்றாகும்.

பருப்பு மற்றும் அரிசி சேர்க்கை காரணமாக திருப்தி அதிகரிக்கலாம்.

உளுந்து உடல் வலிமைக்கும், குறிப்பாக பிரசவத்திற்குப் பிந்தைய பாரம்பரிய உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம் ஆகியவை ஒரே உணவில் கிடைக்க உதவுகிறது.

குறிப்பு: கருப்பு உளுந்து சிலருக்கு வாயுத்தொல்லை அல்லது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். நன்றாக ஊறவைத்து வேகவைப்பது செரிமானத்திற்கு உதவும். மருத்துவப் பயன் என்பது நோய்க்கான சிகிச்சைக்கு மாற்றாகாது.

- ஹேமலதா வாசுதேவன்