Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தட்டை பயறு சாக்லேட் ஃபட்ஜ்

தேவையான பொருட்கள்

தட்டைப்பயறு - ஒரு கப்

பேரீச்சம்பழம் - 7

கோக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

ஹிமாலயன் உப்பு - ஒரு சிட்டிகை

சாக்லேட் - 100 கிராம்

நட்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை

தட்டை பயறை 6 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும். பேரீச்சம் பழத்தை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் வேகவைத்த தட்டை பயறு, ஊற வைத்த பேரீச்சம் பழம், ஹிமாலயன் உப்பு மற்றும் கோக்கோ பவுடர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் காகிதம் போட்டு அரைத்ததை ஊற்றி பரவி வைக்கவும். அதன் மேல் சாக்லேட்டை உருக்கி ஊற்றவும். அதன் மேல் விருப்பப்படும் நட்ஸை பொடித்து தூவவும். மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். விருப்பப்படும் வடிவத்தில் வெட்டி பரிமாறவும். சுவையான தட்டை பயறு சாக்லேட் ஃபட்ஜ் தயார்.

தட்டை பயறின் நன்மைகள்

தசைகள் மற்றும் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.

நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவுகிறது.

உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு உணவில் சேர்க்கலாம்.

நார்ச்சத்து மற்றும் புரதம் காரணமாக உணவுக்குப் பிறகு சர்க்கரை வேகமாக உயர்வதைத் தணிக்க உதவுகிறது.

பருப்பு வகைகள் பொதுவாக நார்ச்சத்து மற்றும் தாவரப் புரதத்தின் நல்ல ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன.

தட்டை பயறில் இரும்பு, துத்தநாகம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

அரிசி, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது சிறந்த புரத உணவாக அமைகிறது.

சாப்பிடும் முறை: தட்டை பயறை 6-8 மணி நேரம் ஊறவைத்து நன்றாக வேகவைத்து சுண்டல், குழம்பு, கூட்டு அல்லது முளைகட்டிய பயறு வடிவில் சாப்பிடலாம்.

குறிப்பு: அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை/வயிற்று உப்புசம் ஏற்படலாம். தொடக்கத்தில் சிறிய அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

- ஹேமலதா வாசுதேவன்