Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீர்க்கங்காய் இளங்கூட்டு

தேவையானவை

பாசிப்பருப்பு - அரை கப்

பீர்க்கங்காய் - 150 கிராம்

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 1

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க

எண்ணெய், நெய் - தலா 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

பீர்க்கங்காயைத் தோல் சீவிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை முக்கால் பதமாக வேகவிட்டு, வெந்ததும், பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து அதிலேயே மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். காய் வெந்ததும் இறக்கவும். கடுகு தாளித்துச் சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டு கலக்கவும்.