Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீர்க்கங்காய் துவையல்

தேவையானவை:

இளம் பீர்க்கங்காய் - 2,

துவரம் பருப்பு,

கடலைப்பருப்பு,

உளுத்தம் பருப்பு,

தேங்காய் துருவல் - தலா 1 டேபிள் ஸ்பூன்,

மிளகாய் வற்றல் - 4,

புளி, உப்பு, பெருங்காயம்,

எண்ணெய் - தேவைக்கு.

தாளிக்க

தேங்காய் எண்ணெய்,

கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிது.

செய்முறை:

பீர்க்கங்காயை அலம்பி தோல் சீவி துண்டுகள் போடவும். எண்ணெயில் காயம், பருப்பு வகைகள், மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் பீர்க்கங்காய் துண்டுகளை ேசர்த்து சிவக்க வறுத்துக் கொண்டு, ஆறியவுடன் உப்பு, புளி, பருப்புகளை முதலில் 2 சுற்று விட்டு பின் தேங்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும். சிலர் தோலையும் வறுத்து சேர்த்து அரைப்பார். (காய் கசக்கிறதா? என்பதை கிள்ளி வாயில் போட்டு சுவைத்து பார்த்து வாங்கவும்). தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.