Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீட்ரூட் கீரை சாதம்

தேவையான பொருட்கள்

1 கட்டு பீட்ரூட் இலைகள்

1 கப் அரிசி

1வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

1+4 கப் தேங்காய் துருவல்

உப்பு தேவையான அளவு

1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

தாளிக்க :

1 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது எண்ணை

1/4 டீஸ்பூன் கடுகு

1 டேபிள் ஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பு

செய்முறை

அரிசியை நன்கு கழுவி, குக்கரில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து இறக்கவும். ஆவி தனிந்ததும் சாதத்தை எடுத்து நன்கு ஆற வைக்கவும்.பீட்ரூட் இலைகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், நெய் சேர்த்து, கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் இலைகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின் அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்பு எடுத்து தேங்காய் துருவல் சேர்த்து, உதிரியாக வரும் வரை வறுத்து, வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும். பின் எலுமிச்சை சாறு கலந்து இறக்கினால் பீட்ரூட் கீரை சாதம் தயார்.

இபோது தயாரான சாதத்தை எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றினால், சுவையான பீட்ரூட் கீரை சாதம் அருமையான சுவையில் சுவைக்கத்தயார்.