தேவையானவை:
பீன்ஸ் - ¼ கிலோ (பொடியாக நறுக்கியது),
உதிராக வடித்த சாதம் - 2 கப்,
உப்பு - தேவைக்கு ஏற்ப,
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்.
வறுத்துப் பொடிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்,
முழு உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்,
வரமிளகாய் - 3,
பெருங்காயத்தூள் - ½ டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் ெகாரகொரப்பாகப் பொடிக்கவும். அதே வாணலியில் 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டுப் பீன்ஸை வதக்கி மூடிவைக்கவும். இடையே திறந்து உப்பு சேர்த்துக் கிளறிவிடவும். தண்ணீர் சேர்க்ககூடாது. பீன்ஸ் வெந்ததும் பொடித்து வைத்துள்ள பொடியினை தூவி ஒரு முறை நன்கு கிளறி சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.


