தேவையானவை:
பொடியாக நறுக்கிய இளம் வாழைத்தண்டு - 1 கப்,
ஊறவிட்டு வடித்த பாசிப்பருப்பு - ¼ கப்,
தேங்காய் துருவல் - ¼ கப்,
உப்பு, - தேவைக்கு,
பொடித்த வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்,
மேலே தூவ வறுத்து பொடித்த வேர்க்கடலை - ஒரு கைப்பிடி.
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ½ டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் - 1,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாணலியில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி தாளிக்கும் பொருள் தாளிக்கவும். அதில் ஊறவிட்ட பாசிப்பருப்பு, வாழைத்தண்டு மற்றும் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி மிதமான தீயில் வேகவிட்டு, தேங்காய் துருவல், வெல்லம் மற்றும் பொடித்த வேர்க்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும். சற்றே வித்தியாசமானது இக்கறி.


