தேவையானவை:
நறுக்கிய வாழைத் தண்டு - 1 கப்,
நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா 2,
மல்லி, கறிவேப்பிலை நறுக்கியது - ¼ கப்,
பச்சை மிளகாய், இஞ்சி - சிறிது (நறுக்கியது),
தோசை மாவு - 2 கப்,
நெய் (அ) எண்ணெய் - 100 கிராம்.
செய்முறை:
நறுக்கிய காய்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வேகவைத்த வாழைத்தண்டை நன்கு கலக்கவும். தோசை தவாவில் ஒரு கரண்டி மாவு விட்டு மேலே கலந்த வாழைத்தண்டு கலவை தாராளமாக தூவி, மேலே சிறிது இட்லி மிளகாய் பொடி தூவி நெய் (அ) எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.


