Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாழைப்பூ பனீர் கிரீம்

தேவையான பொருட்கள்:

*வாழைப்பூ 1 கப் (நறுக்கியது)

*பனீர் 100 கிராம் (துருவியது)

*பால் ¼ கப்

*வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)

*பூண்டு 4 பல் (நசுக்கியது)

*மிளகுத்தூள் ½ டீஸ்பூன்

*சீரகத்தூள் ½ டீஸ்பூன்

*பச்சை மிளகாய் - 1

*குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

*பொடித்த மிளகாய் வற்றல் - 1 டேபிள் ஸ்பூன்

*உப்பு தேவையான அளவு

*நெய் அல்லது வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

*கொத்தமல்லித்தழை சிறிதளவு.

செய்முறை:

*வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, சிறிது மோரில் 15 நிமிடம் ஊறவைத்து கழுவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வாழைப்பூவை மென்மையாக வேகவைத்து வடிகட்டவும். கடாயில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சூடாக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். குடைமிளகாய், வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து கலக்கவும். பனீர், பால், 2 பல் பூண்டு, 1 பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவில் ஊற்றி 2 நிமிடங்கள் சமைத்து அடுப்பை அணைக்கவும்.

*கொத்தமல்லித்தழை, மிளகாய் வற்றல் தூவி பரிமாறவும். சுவையான வாழைப்பூ பனீர் கிரீம் தயார்.

மருத்துவப் பயன்கள்:

*வாழைப்பூ இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது; ரத்தசோகையை குறைக்க உதவும்.

*பெண்களின் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்க உதவுகிறது.

*செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்க உதவும்.

*பனீர் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்தது; தசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

*உடலுக்கு நீண்ட நேரம் சக்தி அளித்து பசியை கட்டுப்படுத்த உதவும்.

*இதை சப்பாத்தி, ரொட்டி அல்லது சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

- ஹேமலதா வாசுதேவன்