Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாழைப்பூ குருமா

தேவையான பொருட்கள்:

*வாழைப்பூ - 1

*சின்ன வெங்காயம் - 20(நறுக்கியது)

*பச்சை மிளகாய் - 1 (கீறியது)

*மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

*கொத்தமல்லித் தூள் - 1/2 ஸ்பூன்

*சீரகத் தூள் - 1/2 ஸ்பூன்

*தேங்காய்ப் பால் - 3/4 கப்

*சீரகம் - 1/2 ஸ்பூன்

*கறிவேப்பிலை - சிறிதளவு

*எண்ணெய் - 2 ஸ்பூன்

*உப்பு - தேவையான அளவு

*தண்ணீர் - தேவையான அளவு

*எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

*அரிசி மாவு - 1 ஸ்பூன்

செய்முறை:

*முதலில் வாழைப்பூவை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்த வாழைப்பூவை சமைக்கும் வரை மோரில் ஊற வைக்கவும். சமைக்கும் போது பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்து அதில் முக்கால் கப் வெந்நீர் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

*ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள் மற்றும் சீரகத் தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

*பின்னர் தேங்காய்ப் பாலை சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்க்கவும். தேங்காய்ப்பால் கொதிக்கத் தொடங்கும் போது மோரில் ஊற வைத்த வாழைப்பூவை சேர்க்கவும்.

*தேவையான அளவு உப்பு சேர்த்து, காரம் மற்றும் சுவையைச் சரிபார்க்கவும். குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.

*அடுப்பை அணைத்துவிட்டு, ஆவி வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும். எண்ணெய் மிதந்து வரும் போது நன்றாகக் கலக்கவும். குழம்பு மிகவும் தண்ணியாக இருந்தால், சிறிதளவு அரிசி மாவை தண்ணீரில் கரைத்து. குழம்பில் சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

*குழம்பு நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.