Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மூங்கில் குருத்து கூட்டு

தேவையான பொருட்கள்:

மூங்கில் குருத்து - 2 கப்

துவரம் பருப்பு - 1/2 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

மூங்கில் குருத்தை நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். சில மூங்கில் குருத்து வகைகளில் கசப்பு தன்மை இருக்கும். அதனை போக்குவதற்கு, நறுக்கிய குருத்தை கொதிக்கும் நீரில் சிறிது நேரம் வேக வைக்கவும். பின்னர் நீரை வடித்து விடவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகப் பொடி சேர்த்து வதக்கவும்.ஊற வைத்த துவரம் பருப்பு மற்றும் நறுக்கிய மூங்கில் குருத்து சேர்த்து நன்றாக கலக்கவும்.தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும். விசில் போன பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கலாம்.