தேவையானவை:
சோம்பு இலை - 2,
பச்சை மிளகாய் - 1,
புளி - கோலி குண்டு அளவு.
வெல்லம், மஞ்சள் தூள் - சிறிதளவு,
கடுகு - தாளிக்க ½ டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
சோம்பு இலைகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கவும். பின் தண்டு கனமாக இருந்தால் அதை நீக்கவும். பச்சை மிளகாயை கிள்ளி சேர்க்கவும். கடாயில் எண்ெணய் ஊற்றி கடுகு போட்டு, சோம்பு இலைகள், மிளகாய் சேர்த்து வதக்கவும். புளி கரைத்த நீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதித்ததும் வெல்லம் சேர்த்து இறக்கலாம்.


