Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு பப்பு

தேவையானவை:

பயத்தம் பருப்பு - ½ கப்

சேப்பங்கிழங்கு இலை - 3 பெரியது

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1

உப்பு தேவையான அளவு

கடுகு, சீரகம் - தலா ½ தேக்கரண்டி.

செய்முறை:

சேப்பங்கிழங்கு இலையை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அதை சுருட்டி மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டவும். பயத்தம் பருப்புடன் இலையை சேர்த்து 1 கப் தண்ணீரில் வேகவிடவும். வேகவைத்த பருப்பு, சேப்பங்கிழங்கு இலையுடன் நறுக்கிய பச்சை மிளகாய் துண்டுகள், மிளகாய் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கடுகு, சீரகத்தை தாளித்து, கறிவேப்பிலையையும் போட்டு இறக்கவும்.