Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திரா ஸ்டைல் முட்டைக்கோஸ் பிரியாணி

தேவையான பொருட்கள்:

*நறுக்கிய முட்டைக்கோஸ் 1 கப்

*பச்சை பட்டாணி - அரை கப்

*பாஸ்மதி அரிசி - 1 கப்

*தண்ணீர் - 2 கப்

*பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)

*பச்சை மிளகாய் - 2

*இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

*புதினா - ஒரு கைப்பிடி அளவு

*கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு

*மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

*மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

*கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

*உப்பு -தேவையான அளவு

*தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

*எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

தாளிக்க:

*எண்ணெய் - 2 ஸ்பூன்

*நெய் -1 ஸ்பூன்

*பட்டை -1 இன்ச்

*கிராம்பு - 2

*ஏலக்காய் -1

*அன்னாசிப் பூ - 1

*பிரிஞ்சி இலை -1

*கல்பாசி - சிறிதளவு

செய்முறை:

*முதலில் பாஸ்மதி அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். முட்டைக்கோஸ் மற்றும் வெங்காயத்தைக் கழுவி நறுக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.

*ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை மற்றும் கல்பாசியை சேர்த்து வதக்கவும்.

*மசாலா பொருட்கள் வாசனை வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

*பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, அவை சுருங்கும் வரை வதக்கவும்.

*பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

*தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

*பின்னர் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

*அதன்பின் தேவையான அளவு தண்ணீர், அரிசி, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்க்கவும்.

*நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.

*பிரஷர் தானாக வெளியேறியதும் அரிசி உடையாமல், முள்கரண்டியால் மெதுவாகக் கிளறிவிடவும்.

*அவ்வளவுதான் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் முட்டைக்கோஸ் பிரியாணி ரெடி. இதை தயிர் வெங்காயத்துடன் சூடாக பரிமாறவும்.