தேவையானவை:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
கடலைப்பருப்பு - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பினை ஊறவைக்கவும். பிறகு அதனுடன் மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு மிக்சியில் வடை பதத்திற்கு அரைக்கவும். வேகவைத்த உருளையை உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம் வதக்கி அரைத்த கலவை, உருளை சேர்த்து பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு கிளறி, சிறிய தீயில் மூடி போட்டு வேகவைத்து இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலை போடவும்.


