தேவையானவ:
வேக வைத்த உருளைக்கிழங்கு 100 கிராம்
தக்காளி 600 கிராம்
வேக வைத்த பச்சை பட்டாணி 50 கிராம்
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாதூள் 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
உப்பு தேவைக்கேற்ப
கொத்துமல்லி சிறிதளவு.
செய்முறை:
தக்காளியை வேகவைத்து தோல் உரித்து விதையை எடுத்துவிட்டு மிக்ஸியில் மைய்ய அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, பட்டாணியை வேக வைத்து மிதமாக மசித்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, அதில் சீரகம் தாளித்துவிட்டு பச்சைமிளகாய் போடவும். பின்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம. மசாலாதூள், கொத்தமல்லி போட்டு கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, இதில் உருளை, பட்டாணி போடவும். உப்பு போட்டு கிளறியதும் தக்காளி விழுதைக் கொட்டி மிதமான தீயில் வைக்கவும். நன்கு கொதிக்கவிட்ட பின்பு இறக்கி சுடச் சுட ஆலு மட்டர் சப்ஜியை பரிமாறலாம்.


