கொல்கத்தா: பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான, அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா மேற்குவங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பாலியல் துன்புறுத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையும், ஒருமுறை பாலியல் வழக்கில் சிக்கும் நபர் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால் மரண தண்டனையும் விதிக்கப்படும்.