Wednesday, April 24, 2024
Home » சர்ச்சைகளை கிளப்பும் மாம்பழம் லீடரின் மனைவி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சர்ச்சைகளை கிளப்பும் மாம்பழம் லீடரின் மனைவி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Mahaprabhu

‘‘சம்திங் கை மாறியதால, வன்கொடுமை கேஸ் சாதா கேசாக மாறிடுச்சாம், லெப்ட் ரைட் வாங்கிய உயர்காக்கி பற்றி சொல்லுங்களேன்” என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் சிட்டியில் ஆல் வுமன் காக்கிகள் நிலையத்துல 3 எழுத்து கொண்ட 3 ஸ்டார் காக்கி பணியாற்றி வர்றாங்க. இவர் பெட்டிஷன் கொடுக்கும் பார்ட்டிங்ககிட்ட முதல்ல எவ்வளவு சம்திங் கொடுப்பீங்கன்னு கேட்டுட்டுத்தான் புகாரையே வாங்குறாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இளம்பெண் ஒருத்தரு புகார் கொடுக்க ஆல்வுமன் காக்கிகள் நிலையத்துக்கு சென்று, ஒரு வாலிபர் என்னை பாலியல் வன்கொடுமை செஞ்சிட்டாருன்னு புகார் சொல்லியிருக்காங்க. ஆனா, வீடியோ, போட்டோ எடுத்து மிரட்டுறாருன்னு சாதா கேஸ் போட்டு முடிச்சிட்டாங்களாம்.

இந்த சாதா கேசுக்கு காரணம், 50கே வரைக்கும் ஸ்டார் காக்கிக்கு கை மாறியதுதானாம். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மாவட்ட உயர் காக்கிகிட்ட கண்ணீரோட போய் நின்றிருக்காங்க. இதனால் கண் சிவந்த உயர்காக்கி, 3 ஸ்டாரை வரவழைச்சு லெப்ட், ரைட் வாங்கிட்டாராம். உடனே அந்த கேசையும் பாலியல் வன்கொடுமை கேசாக மாற்றிட்டாங்களாம். தனிப்பிரிவு காக்கிகள் இதுபோல விஷயங்களை மாவட்ட உயர்காக்கிக்கு தெரியப்படுத்தணும், இல்லாவிட்டால் அவங்க மேல ஆக்‌ஷன் எடுக்கணும்னு காக்கிகள் வட்டாரத்துல பேசிக்கிறாங்க” என்றார் விக்கியானந்தா.

‘‘வாடகை வாகனங்கள் பெயரில் சொந்த வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்துறாங்களாமே?” ஆச்சரியமாக கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க வாகனங்களில் பறக்கும்படைகள் கண்காணித்து வருகின்றன. மேலும் தேர்தல் தொடர்பான பல்வேறு தேவைகளுக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள வாகனங்கள் ‘எலெக்‌ஷன் இம்மீடியட்’ என்பது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டி மாவட்டம் முழுவதும் வலம் வருகிறது. ஆனால், வாடகை வாகனங்கள் அல்லாத ‘ஓன் போர்டு’ வாகனங்களிலும் இதனை போன்று ‘எலெக்‌ஷன் இம்மீடியட்’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதெப்படி சொந்த தேவைகளுக்கு கார் வைத்துள்ளவர்களின் வாகனங்கள் இந்த ஸ்டிக்கர்களுடன் வலம் வருகிறது என்று கேட்டால், அது சில அதிகாரிகளின் சொந்த வாகனங்களாம். அவற்றை ‘வாடகை’ கணக்கில் கொண்டு வந்துள்ளார்களாம் என்று பதில் வருகிறது. தேர்தல் ஆணையம் விதிமீறல்கள் தொடர்பாக எல்லோருக்கும் வகுப்பு எடுக்கிறது. ஆனால், இவை விதிமீறல்கள் இல்லையா? அரசு வாகனங்களை பயன்படுத்த வேண்டும், அல்லது சட்டபூர்வமாக உள்ள வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும், இவ்வாறு அதிகாரிகளின் சொந்த வாகனத்தை பயன்படுத்தலாமா? என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்” என்றார் விக்கியானந்தா.

‘‘மாம்பழ லீடரின் மனைவி புதிய சர்ச்சையில் சிக்கிட்டாராமே?” என்றார் பீட்டர் மாமா.

‘‘தாமரையுடன் மாம்பழம் வச்சிருக்கும் கூட்டணி பலத்த சர்ச்சைகளை கிளப்பி இருப்பது ஊரறிஞ்ச சேதி. இது ஒரு புறமிருக்க தாமரையும், அதன் கூட்டணி வேட்பாளர்களும் செய்யும் தேர்தல் விதி மீறல்களும் சர்ச்சையை கிளப்பிக்கிட்டு இருக்காம். தாமரையின் கூட்டணியில் அதியமான் கோட்டை மாவட்டத்தில் மாம்பழக்கட்சி வேட்பாளராக லீடரின் மனைவி போட்டியிடுறாங்க. அவங்க தேர்தல் பிரசாரம் ஆரம்பிச்ச முதல்நாளே விதிகளை மீறியதாக ஒரு கேஸ் பதிவாச்சு. இப்போ இரவு 10 மணி தாண்டின பிறகும் ஓட்டு கேட்டது புதிய சர்ச்சையாக கிளம்பி இருக்காம்.

தொகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இரவில் ஓட்டு கேட்டு வேட்பாளர் வருவதாக நிர்வாகிகள் அறிவிச்சாங்களாம். வேட்பாளரை வரவேற்க பட்டாசு, வாணவெடிகள் எல்லாம் வாங்கி ரெடியா இருந்தாங்களாம். இதனால் கிராம மக்களும் கண்விழிச்சு காத்திருந்தாங்களாம். ஆனா, 10 மணிக்குள் வரவேண்டிய வேட்பாளர் வரவே இல்லையாம். கடுப்பான மக்கள், பட்டாசுகளை வெடிச்சும், வாணவெடியை கொளுத்தியும் ைடம்பாஸ் செஞ்சாங்களாம். இப்படிப்பட்ட நிலையில் 10.30க்கு வந்து ஓட்டு கேட்டாங்களாம் லீடரின் மனைவி. குக்கிராமத்தில் நடந்த இந்த விதிமீறல் இப்போது வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையா வெடிச்சிருக்காம்” என்றார் விக்கியானந்தா.

‘‘ மதிக்காத வேட்பாளருக்கு எதிராக களத்தில் திரைமறைவு வேலையில் இறங்கியுள்ள இலை கட்சி நிர்வாகிகள்’’ பற்றி சொல்லுங்க என்றார் பீட்டர் மாமா.

‘‘ நாடாளுமன்ற தேர்தலில் கடலோர தொகுதியில் இலை கட்சி சார்பில் போட்டியிட மாஜி அமைச்சர் கானா, அவரது ஆதரவாளரான மாஜி எம்பியான டாக்டருக்கு சீட் கேட்டிருந்தார். இதேபோல் மாஜி அமைச்சரான மணியானவரும் தனது ஆதரவாளரான கடைசி எழுத்தில் முடியக்கூடிய சங்கர் என்பவருக்கு சீட் கேட்டிருந்தார். கடைசியில் மணியானவர் ஆதரவாளருக்குதான் சீட் கொடுக்கப்பட்டதாம்… இதனால் கானா, சேலத்துக்காரர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் மனுநீதி சோழன் மாவட்டத்தில் மணியானவர் ஆதரவாளரான வேட்பாளருக்கு எதிர்ப்பு அலை வீசும் நேரத்தில் கடலோர மாவட்டத்திலும் சொந்த கட்சிக்குள்ளே மணியானவர் ஆதரவாளரான வேட்பாளருக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதாம்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்கவில்லையாம்… வாக்கு சேகரிப்பிற்கு வரும்போது கூட எந்த பகுதிக்கு வருகிறோம் என்பதை அப்பகுதி பொறுப்பாளர்களிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் உச்சகட்ட கோபத்துக்கு சென்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நம்மளை மதிக்காத வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க கூடாது. அவருக்கு நாம் யார் என காட்ட வேண்டும் என திரைமறைவில் எதிரான வேலையில் இறங்கியுள்ளார்களாம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

15 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi