சென்னை: அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவிகள் மத்தியில்பிற்போக்குத்தனமான, மூடப்பழக்க வழக்கம் பற்றி பேச யார் அனுமதி அளித்தது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.