சென்னை: சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமனம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். பிற்போக்குத்தன பேச்சாளர் மகாவிஷ்ணுவை மாணவிகள் மத்தியில் பேச வைத்ததற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.