குன்னம், நவ.15: குன்னம் அருகே தொடர் மழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் ஊராட்சி, கோவில் பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (60). கடந்த இரண்டு நாட்களாக குன்னம் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பழனியம்மாளின் கூரை வீட்டின் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள் துங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை ஆகியோர் பழனியம்மாளுக்கு ஆறுதல் கூறினர். மேலும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.