Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தொடர் மழையால் பரிதவிக்கும் பொதுமக்கள்

குடகு: குடகு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை கொட்டிதீர்த்து வருகிறது. காவிரியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை உதவி மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், தேவையான இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில், விராஜ்பேட்டை தாலுகாவின் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முத்தாலம்மா (60) மீது மரம் விழுந்து இறந்துள்ளார்.