சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் கனமழை மற்றும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், சென்னையில் இருந்து பெங்களூருக்கும் அதேபோல், பெங்களூரில் இருந்து சென்னைக்கும் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னையில் தொடர் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், நேற்று மாலை 5.30 மணிக்கு, பெங்களூரில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இதேபோல் நேற்று மாலை 6.10 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள், போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து நீடித்து, பயணிகள் குறைவாக இருந்தால், மேலும், சில விமானங்களும் ரத்து செய்யப்படலாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.